உலகம் முழுவதும் மொபைல் வர்த்தகம் தாறுமாறான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் எல்லா நிறுவனங்களின் மொபைல்களையும் ரசிகர்கள் விரும்பி வாங்குகின்றனர். அதனால் எல்லா மொபைல்களுமே பாரபட்சமின்றி விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்திய மொபைல் சந்தையிலும் இந்த கதைதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிளின் சாதனங்கள்தான் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்ற ஒரு தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் உண்டு. ஆனால் அதைத் தவிடு பொடியாக்கி இந்த ஆண்டு 2வது காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலத்தில் மட்டும் 0.55 மில்லியன் சாதனங்களை மைக்ரோமேக்ஸ் விற்பனை செய்திருக்கிறது.
இந்த தகவலை சைபர் மீடியா ரிசர்ச் என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதாவது இந்திய மொபைல் சந்தையில் இந்த ஆண்டின் 2வது காலாண்டில் மட்டும் மைக்ரோமேக்ஸ் 18.4 சதவீத விற்பனையை பெற்றுள்ளது. ஆனால் சாம்சங் 13.3 சதவீத விற்பனையை மட்டுமே பெற்று உள்ளது. அதே நேரத்தில் ஆப்பிள் 12.3 சதவீத விற்பனையைப் பெற்றுள்ளது.
ஏறக்குறைய 90 நிறுவனங்கள் 2வது காலாண்டில் தங்கள் சாதனங்களை விற்பனைக்கு வைத்தன. அதில் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்சின் குறைந்த விலை சாதனங்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.
கருத்துரையிடுக