கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஒரு புதிய தொலைத் தொடர்பு சேவையை வழங்க இருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு மை காலேஜ் ப்ளான் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அளவற்ற பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் அக்சஸை கல்லூரி மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது. இதற்காக ரூ.16 செலுத்தினால் போதும். மாதம் முழுவதும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் அளவற்ற அனுபவத்தைப் பெறலாம்.
இந்த சேவை ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள 16 பகுதிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. குறிப்பாக அஸ்ஸாம், பீஹார், ஜார்க்கண்ட், டெல்லி, குஜராத், கொல்கத்தா, மத்திய பிரதேசம், மும்பை, வடகிழக்கு பகுதி, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் உத்திர பிரதேசம் போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அதோடு இந்த திட்டத்தில் வருபவர்கள் 5 பைசாவிற்கு எஸ்எம்எஸ் மற்றும் கால் செய்யவும் வசதியையும் இந்த சேவை வழங்க இருக்கிறது. அதோடு 51112க்கு டெக்ஸ் மெஸேஜை அனுப்ப ரூ. 3 வசூலிக்கப்பட இருக்கிறது.
30 நாள்களுக்கு ஒரு முறை இந்த சேவையை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இந்த புதிய திட்டத்தைப் பற்றி இன்னும் ரிலையைன்ஸ் அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கவில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த சேவை கண்டிப்பாக பயன்படும் என்று நம்பலாம்.
கருத்துரையிடுக