விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd இல்லாதுவிட்டால்இதற்கு எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும் அப்படியே எவ்வாறு BACK UPஎடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி மென்பொருள் ஒன்றினை தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளவும்
பின்னர் அதனைத் திறந்துகொள்ளவும். இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும்.
![உங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...?? உங்களுடைய Driver CD தொலைந்து விட்டதா...??](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_CTIggV8hosNB7A2IHAto2KY8zqa9zzM45QCV3szaDYwAVav9_5WPsUeSoWGXnIpaYEbZNT9F1A0xS79kDZ9rdOygYN8NU6irU-YrysOjE5UBx2VC26g-JpqSZfa0i3lhvv7VhPAygDo/s320/boozet_dd_main.png)
இதில் “ Scan Current System ” என்ற Button ஐ கிளிக் செய்யவும். இப்போ அதில் நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து Driver மென்பொருள்களும் நமக்கு தென்படும். இதில் எதெல்லாம்நமக்கு தேவையோ அத்தனையையும் தேர்வுசெய்து “ Backup now “ என்ற Button ஐ அழுத்தி நீங்கள் விரும்பும் பகுதியில் BACK UP செய்த Driver மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும். அதில் எல்லா Driver களுக்குமாக ஒரே ஒரு setup file மட்டுமே காணப்பபடும். பின்னர் அதனை விண்டோஸ் இயங்குதள நிறுவுகையின் பின்னர் நிறுவிக்கொள்ள வேண்டியதுதான்.
கருத்துரையிடுக