கடந்த வாரம் மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தைக் களமிறக்கியது. கடந்த செவ்வாய் வரை இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் அப்க்ரேட் செய்துள்ளனர். அதனால் மைக்ரோசாப்ட் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்ப்காஸ்ட் என்ற ஒரு நிறுவனம் மைக்ரோசாப்ட்டுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விண்டோஸ் 8ல் உள்ள லைவ் டைல்ஸ்கள் தமக்கு சொந்தமானவை என்றும் அவற்றை 90களிலே தாங்கள் வெளியிட்டிருப்பதாகவும், அவற்றை மைக்ரோசாப்ட் காப்பி அடித்திருப்பதாகவும் இந்த சர்ப்காஸ்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் மீது புகார் எழுப்பி இருக்கிறது.
இந்த லைவ் டைல்ஸ்களை மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் இந்த லைவ் டைல்ஸ் தனது நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அதை மைக்ரோசாப்ட் உரிமை கொண்டாட முடியாது என்றும் சர்ப்காஸ் தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்த சர்ப்காஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும் புகார் செய்திருக்கிறது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக இருந்தால், சர்ப்காஸ்ட் நிறுவனத்திற்கு இழப்பீடாக ஒரு பெரிய தொகையை மைக்ரோசாப்ட் வழங்க வேண்டும். அப்படி ஒரு பெரிய தொகையை வழங்க வேண்டியதாக இருந்தாலும் மைக்ரோசாப்ட்டுக்கு அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக