வர்த்தகத்தினை சிறப்பான முறையில் மேம்படுத்த சமூக வலைத்தளமான ட்விட்டர் எந்த வழிகளில் எல்லாம் உதவுகின்றது என்பதை பார்க்கலாம்.
தொழில் சம்மந்தமான விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. உதாரணத்திற்கு பிராண்டு, ப்ராடெக்டு போன்றவற்றை ட்விட்டர் பக்கத்தில் சரிவர விளம்பரப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதை விளம்பரப்படுத்துதல் என்பதோடு, ட்விட்டர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்று கூறலாம். தகவல்களை பெற வலைத்தளங்களில் தேட வேண்டியிருந்தது. ஆனால் எந்த நிறுவனமாக இருப்பினும் இப்போதெல்லாம் அதற்கு நிச்சயம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் இருக்கவே இருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தினை பார்த்தால், சமீபமாக வெளியான முழு அப்டேஷனை பற்றிய தகவல்களையும் எளிதாக பெற முடியும்.
இதனால் நமது வர்த்தகத்தை பற்றிய தகவல்களை, ட்விட்டர் நண்பர்களுடன் பரிமாறி கொள்ளலாம். இதனால் புதிய ப்ராடெக்டு மற்றும் தொழில் நுட்ப வசதிகள் பற்றிய தகவல்களை ட்விட்டரில் வெளியிடுவது, வர்த்தகத்தினை மேம்படுத்த ஒரு சிறப்பான வழியாக இருக்கும்.
இப்படி பகிர்ந்து கொண்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிப்பதும் மிக முக்கியம். அதாவது ரீட்வீட் செய்ய வேண்டும். இந்த ரீட்வீட் மூலம் நமது கருத்துக்களை தெரிவிப்பது, நண்பர்களுக்கு ஓர் உற்சாகத்தையும் அளிப்பதாக இருக்கும். இதெல்லாம் ட்விட்டரில் வர்த்தகத்தினை மேம்படுத்த ஓர் சிறந்த வழியாக இருக்கும்.
கருத்துரையிடுக