உலகளவில் இருக்கும் நாட்டு நடப்பு விஷயங்களை தெரிந்து கொள்ளவதற்கு ட்விட்டர் போன்ற சமூக வலைதத்ளங்கள் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இதில் நிறைய விஷயங்கள் பெற வேண்டும் என்றால் அதற்கு அதிகமான ‘ஃபாலோவர்கள்’ இருக்க வேண்டும். இதனால் நிறைய ஃபாலோவர்களை பெற வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
இமெயில் மற்றும் ப்ளாக் போன்றவற்றின் முகவரிகள் இருந்தால், அதை ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வது நல்லது. இதனால் நமது ப்ளாகிற்கும் நிறைய நண்பர்கள் வருகை தருவார்கள். இது போன்ற பகிர்தல்களாலும் அதிக ஃபாலோவர்களை பெறலாம்.
நமது மாநிலத்தில் மட்டும் அல்லாமல், மற்ற மாநிலம் மற்றும் நாடுகளில் இருக்கும் ட்விட்டர் நண்பர்களை அலசி ஆராய வேண்டும். அவர்களின் ‘பையோ’ தகவல்களை பார்த்து நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
நமது துறைக்கு ஏற்ற வகையில் நிறைய நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளும் இருக்கும். இப்படி நமது தேவை அறிந்து ட்விட்டர் நண்பர்களை தேர்வு செய்வது சிறந்தது.
உதாரணத்திற்கு அரசியல் பற்றி விஷயங்களில் ஆதி முதல் அந்தம் வரை தகவல்களை அப்டேட் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு தகந்த வகையில் ட்விட்டர் நண்பர்களை தேர்வு செய்து ‘ஃபாலோ’ கொடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
நமது ட்விட்டர் பக்கத்திலும் சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் ப்ரொஃபைல் பக்கத்தை நிரப்புவதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. இந்த ப்ரொஃபைலில் ‘பையோ’ என்ற இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் இரண்டு வரியில் அழகான ஒரு வாசகத்தை சொல்ல வேண்டும். ஆனால் அந்த வாசகம் நமது சிறந்த குணாதிசியத்தை காட்டுவதாகவும், அதே சமயம் நமது துறையை குறிப்பதாகவும் இருக்க வேண்டும். இப்படி பையோவை சிறப்பாக கொடுப்பதினால், ட்விட்டர் நண்பர்களை எளிதாக கவர்ந்துவிட முடியும்.
பிறகு வலைத்தளங்களில் கிடைக்கும் முக்கிய தகவல்களை தினமும் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் ட்விட்டர் நண்பர்களின் பார்வையில் நீங்கள் ஒரு தனி இடத்தை பிடிக்க முடியும். அதோடு ட்விட்டரில் பிரபலங்களை ஃபாலோ செய்வதும் ஒரு வகையில் அதிக ட்விட்டர் நண்பர்களை பெற உதவும்.
கருத்துரையிடுக