A+ A-

ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் எச்டிசி?


சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது ஸ்மார்ட்போனை வழங்க, எச்டிசி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
Is Facebook about to launch its own smartphone? :Reports

ஃபேஸ்புக் ஸ்மார்ட்போன் உலகிலும் கால்பதிக்க இருப்பதாக ஏற்கனவே நிறைய செய்திகள் வெளியாகி வந்தன. இதன் பிறகு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ஏதும் அதிகம் வெளியாகவில்லை. இப்போது எச்டிசி நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு தற்பொழுது ஓப்ரா யூஎல் என்ற கோட்நேம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும் பிராசஸர் மற்றும் 1280 X 720 திரை துல்லியம் ஆகியவற்றையும் கொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பாக்கெட்டிற்கும், பயன்பாட்டிற்கு கச்சிதமாக இருக்கும் வகையில் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதனால் இன்னும் கொஞ்சம் காத்திருந்து தகவல்களை பெற வேண்டியுள்ளது.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது ஸ்மார்ட்போனை வழங்க, எச்டிசி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.