பிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும் டுவிட்டருக்கு உலகெங்கிலும் 140 மில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் காணப்படுகின்றனர்.
தற்போது இத்தளமானது பாதுகாப்பு தேவைகள் கருதி தனது தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு பிரத்தியேக மின்னஞ்சல் அனுப்பும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இதற்கான உண்மையான காரணத்தை வெளியிடாத டுவிட்டர் தளமானது தனது மின்னஞ்சல் செய்தில் ”ஏனையவர்களின் பாவனையிலிருந்து தங்களின் கணக்கினை பாதுகாப்பதற்காகவே கடவுச்சொல்லை மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என தெரிவித்துள்ளது.
இதேவேளை டுவிட்டர் மீதான ஸ்பார்மர்களின் செயற்பாடுகளை அவதானித்த பின்னரே அத்தளமானது கடவுச்சொற்களை மாற்றக் கோருகின்றது என்ற ஊகம் TechCrunch என்ற இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக