A+ A-

விரைவில் அறிமுகமாகும் பேஸ்புக் கைப்பேசிகள்

சமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டு அசைக்க முடியாத அரசனாக பேஸ்புக் திகழ்கின்றது.



இத்தளமானது HTC நிறுவனத்துடன் இணைந்து தனது உற்பத்தியில் உருவாக்கப்பட்டு வரும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.
Opera UL எனும் பெயரைத் தாங்கி வருவுள்ள இக்கைப்பேசிகள் Android 4.1.1 Gelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுவருகின்றது.

தவிர இக்கைப்பேசிகள் 1280 x 720 Pixels Resolution கொண்ட HD தொடுதிரையினை உள்ளடக்கியதாகவும், 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor-னையும் கொண்டுள்ளது.

மேலும் இக்கைப்பேசிகளில் Adreno 305 graphic தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.