A+ A-

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஐபோன்+



இந்தியாவில் தற்போது ஆப்பிளின் ஐபோன் மோகம் அறிவித்திருக்கிறது. தற்போது ஒரு புதிய ஆப்பிள் ஐபோன்+ என்ற பெயரில் ஒரு புதிய போன் இந்தியாவில் களமிறங்கி அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த ஐபோன்+ ரூ.900ற்கு விற்பதாகவும் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

Apple\


இந்த ஐபோன்+ன் பின்புறம் ஆப்பிளின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே டிசைன்ட் பை ஆப்பிள் இன் கலிபோர்னியா அன்ட் மேட் இன் சைனா என்ற வாசகமும் உள்ளது. இந்த ஐபோன்+ பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற ஐபோன் மாடல்களைப் போலவே உள்ளன.
அதனால் ஆப்பிளின் ரசிகர்களின் கவனம் இந்த புதிய ஐபோன்+ன் மீது திரும்பி இருக்கிறது. ஆனால் இந்த போன் ஆப்பிளின் ஐபோனிற்கு பக்கத்தில்கூட வர முடியாது. மேலும் இதன் பெயர் ஐபோன்+ அல்ல மாறாக லைபோன் என்று மைபைல் இந்தியன் தெரிவித்திருக்கிறது.
எனவே குறைந்த விலை மொபைல்களை வாங்குபவர்கள் அவற்றின் தரம் பார்த்து வாங்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.