A+ A-

இலவச வைபை வசதியை வழங்கும் பேஸ்புக்


உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய புதிய இலவசங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பேஸ்புக் தனது உறுப்பினர்களுக்கு இலவச வைபை சேவையை அறிவித்திருக்கிறது. இதை டிஸ்கவரி நியூஸ் உறுதி செய்திருக்கிறது.
Facebook

பேஸ்புக் உறுப்பினர்கள் தங்களது பேஸ்புக் கணக்கை மிக எளிதாக அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வதற்கு வசதியாக அவர்களுக்கு இலவச வைபை சேவையை வழங்கும் திட்டத்தை தற்போது தாம் பரிசோதனை செய்து வருவதாக பேஸ்புக் தெரிவித்திருக்கிறது.
டாம் வெட்டிங்க்டன் என்பவர் இந்த பரிசோதனையை செய்து வருவதாக தெரிகிறது. அதனால் விரைவில் பேஸ்புக் உறுப்பினர்கள் விரைவில் இலவச வைபை சேவையை பெறுவார்கள் என்று நம்பலாம்.