சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் டைம்லைன் பற்றிய புதிய பேச்சுக்கள் எழுந்து வருகிறது. புதிதாக டைம்லைன் பக்கத்தினை வடிவமைத்து வருகிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.
டைம்லைன் என்ற புதிய பக்கம் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் அனைத்து ஃபேஸ்புக் உறுப்பினர்களும் அதை பயன்படுத்தவில்லை. டைம்லைன் பக்கம் சிலருக்கு விருப்பமானதாக இருந்த அதே சமயம் சிலருக்கும் விருப்பமில்லாததாகவும் இருந்தது.
இதனால் டைம்லைன் பக்கத்தை, அனைவருக்கும் ஃபேஸ்புக் கட்டாயமாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக டைம்லைன் பக்கத்தினை உருவாக்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்பொழுது இருக்கும் டைம்லைனை விடவும், ஃபேஸ்புக் வடிவமைக்க இருக்கும் புதிய டைம்லைன் அகன்றதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதோடு ஃபேஸ்புக்கின் புதிய டைம்லைன் பக்கத்தின் வடிவமைப்பு பற்றிய தகவல்களை தற்பொழுது வெளியிடுவதாக இல்லை என்று கூறி ஃபேஸ்புக் ரகசியம் காத்துவருகிறது.
கருத்துரையிடுக