நாம் அனைவரும் youtube மற்றும் மற்ற பல தளங்களில் வீடியோக்களை பார்ப்போம் அவற்றை தரவிறக்க நினைக்கும்போது ஏதேனும் ஒரு மென்பொருளை நாடுவோம் அல்லது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை நாடுவோம்.
இந்த மென்பொருட்கள் சரியாக தரவிறக்கம் செய்வதில்லை பாதியில் தரவிறக்கம் நின்றுவிடும் அல்லது மென்பொருள் ஹாங் ஆகிவிடும், சரி இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம் என்றால் அதில் பல தளங்கள் தரவிறக்க சுட்டியே கிடைக்காது சில மட்டுமே சரியாக வேலை செய்யும்.. அதிலும் நீங்கள் அந்த வீடியோ முழுவதையும் பார்த்துவிட்டு அதன்பிறகு தரவிறக்கினால் அந்த வீடியோ உங்களால் இரண்டு முறை தரவிறக்கப்படுகிறது இதனால் தேவையற்ற இழப்பு ஏற்படுகிறது..

இதனை தவிர்க்க நீங்கள் வீடியோ முழுவதும் பார்த்தவுடனே எந்த தரவிறக்கமும் செய்யாமல் அதனை ஒரு கோப்பாக உங்கள் கணினியில் சேமித்தால் எப்படி இருக்கும்? அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.(கொஞ்சம் நீளமான பதிவு.)
1)முதலில் நீங்கள் எப்போதும் போல வீடியோவை பாருங்கள், முழுதும் பார்த்து முடிந்தவுடனோ அல்லது முழுதும் ஸ்டிரீமிங் முடிந்தவுடனோ உங்கள் உலவியை மூடிவிடாமல் மினிமைஸ் செய்துவிட்டு அடுத்த வரியில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபோல்டருக்கு செல்லுங்கள்.
2)இந்த போல்டரானது நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் மற்றும் உலவி இவற்றை பொறுத்து மாறுபடும் உங்களின் உலவி மற்றும் இயங்குதளத்திற்கு நேரே உள்ள ஃபோல்டரை தேர்ந்தெடுக்கவும்.
இயங்குதளம் | உலவி | ஃபோல்டர் |
விண்டோஸ் 7
| நெருப்புநரி | C:\Users\[USERNAME*]\AppData\Local\Mozilla \Firefox\Profiles\zdo1e2i8.default\Cache |
விண்டோஸ் 7 | குரோம் | C:\Users\[USERNAME*]\AppData\Local\ Google\Chrome\User Data\Default\Cache |
விண்டோஸ்xp
| நெருப்புநரி | C:\Documents and Settings\[USERNAME*]\Application Data\Mozilla\Firefox\Profiles\Default\Cache |
விண்டோஸ்xp | குரோம் | C:\Documents and Settings\[USERNAME*]\Local Settings\Application Data\Google\Chrome\ |
*இதில் சிவப்பு நிறத்தில் உள்ள USERNAME என்பதற்கு பதிலாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயரை கொடுக்க வேண்டும்.இதில் போல்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள போல்டர்களை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்க வேண்டும்.
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்கள் உங்கள் Cache ஃபோல்டருக்கு செல்ல பின்வருமாறு செய்யவும், உங்கள் உலவியில் Tools-->Internet Options என்பதை தேர்ந்தெடுக்கவும்..
அதில் General என்ற டாபிற்கு கீழே உள்ள Settings என்பதை க்ளிக் செய்யவும்.

இப்பொழுது தோன்றும் புதிய விண்டோவில் View Files என்பதை க்ளிக் செய்தால் உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் Cache ஃபோல்டர் திறந்திருக்கும். அதில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
3)இப்பொழுது நீங்கள் உங்கள் கணினியின் Cache ஃபோல்டருக்குள் இருப்பீர்கள் அதில் நாம் தற்பொழுது ப்ளே செய்த வீடியோ தற்காலிக Cache ஆக சேமிக்கப்பட்டிருக்கும், நாம் செய்ய வேண்டியது அதனை கண்டுபிடித்து நிரந்தரமாக சேமித்து கொள்ள வேண்டியதுதான்.
5)அதில் மெமரியில் பெரிய அளவில் உள்ள கோப்புக்களை VLC Media Player கொண்டு ப்ளே செய்து பாருங்கள்..(வீடியோக்கள் அதிக மெமரி அளவைத்தான் கொண்டிருக்கும்.) இதனை நீங்கள் உங்கள் வீடியோவினை கண்டுபிடிக்கும் வரையில் ஒவ்வொரு கோப்பையும் ப்ளே செய்து பார்க்கவேண்டும்.
அங்கே data_1,data_2,.... போன்ற வரிசை எண்ணில் கோப்புகள் இருக்கும் இந்த data_X வரிசை கோப்பை ப்ளே செய்ய தேவையில்லை இவையல்லாத மற்ற கோப்புகளை ப்ளே செய்யுங்கள்.
6) VLC Media Playerல் Play செய்து உங்களுக்கு வேண்டிய வீடியோவினை கண்டுபிடித்த பிறகு அதனை ரைட் க்ளிக் செய்து Copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள்.
7)Paste செய்து அதில் ரைட் க்ளிக் செய்து Rename என்பதை செலக்ட் செய்து பெயரை மாற்றும் போது அதன் இறுதியில் .mp4 or .flv கோப்பாக சேமிக்கவும்.
இப்பொழுது உங்கள் வீடியோ சேமிக்கப்பட்டுவிட்டது ..
7)Paste செய்து அதில் ரைட் க்ளிக் செய்து Rename என்பதை செலக்ட் செய்து பெயரை மாற்றும் போது அதன் இறுதியில் .mp4 or .flv கோப்பாக சேமிக்கவும்.
இப்பொழுது உங்கள் வீடியோ சேமிக்கப்பட்டுவிட்டது ..
கருத்துரையிடுக