இன்று பல்கிப்பெருகிவரும் கணனி மென்பொருள் பாவனைகளுக்கு மத்தியில் வெளியிடப்படும் மென்பொருட்களுக்கு அனேகமாக கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை யாவரும் அறிந்த ஒன்றே.
இதனை மீறியும் சில மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்ற போதிலும் அவற்றிற்கான Serial Key அல்லது CD Key கிடைப்பது அரிதாகவே காணப்படுகின்றது.
இந்திலையில் Serial Key அல்லது CD Key உடன் கூடிய மென்பொருட்களை கொண்ட இணையப்பக்கங்களை விரைவாகவும், இலகுவாகவும் தேடித்தருவதில் uTorrent மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான µTorrent 3.2.2 வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பானது விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடியவாறு காணப்படுவதுடன், பல்வேறு மென்பொருள் நிறுவனங்களால் பயனர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள் தொடர்பான செய்திகளை காண்பிக்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் மூலம் விருப்பங்களை தெரித்தல் நண்பர்களுக்கு தெரியப்படுத்தல் போன்றவற்றிற்கான வசதியும் காணப்படுகின்றது.
தவிர பயனர் இடைமுகத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் முன்யை பதிப்பில் காணப்பட்ட தவறுகள் சிலவும் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக