VLC Media Player ஆனது ஏனைய மென்பொருட்களை விடவும் பல வைகையான வீடியோ போர்மட்களை இயக்கக்கூடியவாறு காணப்படுவதுடன் மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது.
இதனால் அதிகளவான மக்கள் VLC Media Player-ஐ பயன்படுத்துகின்றனர்.
எனினும் இதன் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவும், மேலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் முகமாகவும் தற்போது VLC Media Player - இன் புத்தம் புதிய பதிப்பான VLC 2.0.4 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பின் மூலம் Blu-Ray, DVD, HLS, Ogg மற்றும் MKV போன்ற கோப்புக்களையும் இயக்கக்கூடியவாறு காணப்படுவதுடன் Youtube, Vimeo, Koreus, Soundcloud போன்ற தளங்களில் உள்ள வீடியோ மற்றும் ஓடியோ கோப்புக்களையும் இயக்கும் வசதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக