சம்சங்கிடம் தோற்றுப்போன ஆப்பிள்!
சாம்சங் நிறுவனம் தங்களது ஐபோன் மொபைல் வடிவமைப்பு மற்றும் சில நுட்பக்கூறுகளை திருடியே கேலக்ஸி எஸ் 3 மினி மற்றும் வேறு சில போன்களை வடிவமைத்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே!

இவ்வழக்கில் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க சந்தைகளில் தனது தயாரிப்புகளை விற்காமல் இருந்தது சாம்சங்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கினை திரும்பப்பெற்றுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு வருவதற்கு முன்பே வழக்கை திரும்பப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்சங்கிடம் தோற்றுவிடுவோம் என்ற பயம்கூட ஆப்பிள் நிறுவனத்திற்கு இருந்திருக்கலாம். இப்பொழுதும் தோற்றுவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.


ஆப்பிள் நிறுவனம் மேக்புக்கை மாற்றியமைக்கப் போகிறதாம். இது மீண்டும் ஜூன் 2013ல் வெளிவரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது இன்டெல் ப்ராசெசர் மற்றும் ரெட்டினா திரையை கொண்டிருக்குமாம்.

புதிய அறிக்கையொன்றின்படி ஆப்பிள் நிறுவனம் இதை தயாரிக்க தயாராகி வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்நிறுவனம் மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் எனவும் தெரிகிறது.

ஆரம்ப நிலையிலுள்ள இதன் தயாரிப்பு விவரங்கள் சரியாகக் கிடைக்கப்படவில்லை. இதற்கான விலை சார் விவரங்களும் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.

காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.

கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.

திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.

பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.


வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.

எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.

ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.

குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.

கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.

மீன்கள் இல்லாத நதி -ஜோர்டான்

ரயில்கள் இல்லாத நாடு - ஐஸ்லாந்து

தேசியக்கொடி இல்லாத நாடு - மாசிடோனியா

கடலில் கலக்காத நதி - யமுனை

எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.

பாலூட்டிகளில் நீந்தத் தெரியாத இரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.

நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு.

கூடு கட்டாத பறவை -குயில்.

பாம்புகள் இல்லாத இடம் - ஹவாய் தீவு

விதை இல்லாத பழம் -அன்னாசி.


இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக்.

அடிக்ஷன், டைம் வேஸ்ட், கிரிமினல்மயம் என்றெல்லாம் ஃபேஸ்புக் குறித்துப் புலம்பினாலும், கையை கழுவிட்டு சாப்பிடச் செல்வதைப் போல,
பேஸ்புக்கை பாவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
 இன்றைக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக்.  அடிக்ஷன், டைம் வேஸ்ட், கிரிமினல்மயம் என்றெல்லாம் ஃபேஸ்புக் குறித்துப் புலம்பினாலும், கையை கழுவிட்டு சாப்பிடச் செல்வதைப் போல, பேஸ்புக்கை பாவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சரி.. பாவித்துக் கொள்ளட்டும். ஆனால் அப்படி பயன்படுத்துகையில் முக்கியமாக நான்கு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் ஆஸ்திரேலிய மீடியா சட்ட நிபுணர் ஜாமி வொயிட்.


முதல் விஷயம்: நண்பர்கள் எண்ணிக்கை சராசரியாக 120 இருக்கலாம். அதிகபட்சம் 5000. அதற்கு மேல் போனால் உங்கள் கணக்கு பொய்யா நிஜமா என ஆராய்ந்து, சந்தேகம் வந்தால் முடக்கவும் செய்யும் ஃபேஸ்புக் நிர்வாகம். எனவே நட்பை லிமிட்டாக வைத்திருங்கள்.

இரண்டாவது… ஒருவரின் பேஸ்புக் கணக்கு நிஜமாக இருக்க வேண்டும். பெயருக்கும், பாலினத்துக்கும் சம்பந்தமில்லாத படங்களை ப்ரொஃபைலில் போட்டு வைக்கக் கூடாது. பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரது பெயரில் கணக்கு தொடங்கி, அவரது ப்ரொபைல் படமாக ஒரு எருமை படத்தை வைத்திருந்தார்கள். இதுபோன்றவற்றை அறவே தவிர்க்கச் சொல்கிறது ஃபேஸ்புக்.

மூன்றாவது… ரொம்ப ஆக்டிவா இருந்தாலும் தப்பு என்கிறது ஃபேஸ்புக் நிர்வாகம். இப்படி ஓவர் ஆக்டிவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு போரடித்துவிடுமாம்!

இறுதியாக, காப்பிரைட். உங்களுக்கு சொந்தமான படம், கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யச் சொல்கிறது. ‘If you don’t own it, don’t post,’ இதுதான் ஃபேஸ்புக்கின் முக்கியமான விதி.

அப்படிப் பாத்தா… ஒருவரும் ஸ்டேடஸ் போடுவதோ, படம் பிரசுரிக்கவோ முடியாதே… பல பேர் இரவல் மேற்கோள்களில்தானே பேஸ்புக்கில் காலத்தை ஓட்டுகிறார்கள்!!

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தன்னகத்தே கொண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது. 

facebook

இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இது தவிர இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் MP3 கோப்புக்களின் போர்மட்களை விண்டோஸ் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு, மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதும் விசேட அம்சமாகும்.

Online Market is one of the most famous method to make money. All the website owner's dream is to take their site into top and earn some money through it. In this list, today we will see the top 30 websites which has earned the most money in 2012. In this top 30 ranking, Google has ranked #1 most money earning website of 2012 and Amazon and Yahoo ranked in next 2nd, 3rd positions.

Here Top 30 Websites.


1. Google 
Founders : Larry Page and Sergey Brin
Income per sec :$691.29
Average income of the year :$22,000,000,000


2. Amazon
Founders : Jeff Bezos
Income per sec :$607.05
Average income of the year :$19,200,000,000

3. Yahoo
Founders : Jerry Yang and David Filo
Income per sec :$228.31
Average income of the year :$7,200,000,000

4. eBay
Founders : Pierre Omidyar
Income per sec :$199.45
Average income of the year :$ 6,300,000,000

5. Msn/Live
Founders : Nathan Myhvoid
Income per sec :$102.00
Average income of the year :$ 3,200,000,000

6. Paypal
Founders : Luke Nosek, Max Levchin and Peter Thiel
Income per sec :$71.40
Average income of the year :$2,250,000,000

7. iTunes
Founders : Jeff Robin
Income per sec :$60.00
Average income of the year :$1,900,000,000

8. Rueters
Founders : Marshal Vace
Income per sec :$60.00
Average income of the year :$1,900,000,000

9. Priceline
Founders : Jesse Fink
Income per sec :$59.6
Average income of the year :$1,850,000,000

10. Expedia
Founders : Added Mark Schroeder
Income per sec :$46.00
Average income of the year :$1,450,000,000

11. NetFlix
Founders : Reed Hastings
Income per sec :$38.00
Average income of the year :$1.100.000,000

12. Travelocity
Founders : Terry Jones
Income per sec :$38.00
Average income of the year :$1.100.000,000

13. Zappos
Founders : Nick Swinmurn
Income per sec :$31.70
Average income of the year :$1,000,000,000

14. Hotels.com
Founders : David Litman
Income per sec :$31.70
Average income of the year :$1,000,000,000

15. AOL
Founders : Erik Prince
Income per sec :$30.50
Average income of the year :$960,000,000

16. Orbitz
Founders : Jeff Katz
Income per sec :$28.00
Average income of the year :$870,000,000

17. Overstock
Founders : Robert Brazell
Income per sec :$27.00
Average income of the year $834,000,000

18. Myspace
Founders : Tom Anderson
Income per sec :$25.00
Average income of the year $800.000.000

19. Skype
Founders : Niklas Zennstrom
Income per sec :$18.00
Average income of the year : $550,840,000

20. Sohu
Founders : Zhang Chaoyang
Income per sec :$14.00
Average income of the year: $430,000,000

21. Buy.com
Founders : Robb Brock
Income per sec :$12.68
Average income of the year : $400,000,000

22. StubHub
Founders : Eric Baker
Income per sec : $13.00
Average income of the year : $ 430,000,000

23. Alibaba
Founders : Jack Ma
Income per sec : $10.00
Average income of the year: $315,000,000

24. Facebook
Founders : Mark Zuckerberg
Income per sec :$9.50
Average income of the year : $300,000,000

25. YouTube
Founders : Chad Hurley, Jawed Karim and Steve Chen
Income per sec :$9.50
Average income of the year : $300,000,000

26. Blue Nile
Founders : Mark Vadon
Income per sec :$9.40
Average income of the year: $295,000,000

27. Tripadvisor
Founders : Stephen Kaufer
Income per sec :$8.20
Average income of the year : $ 250,000,000

28. Getty Images
Founders : Mark Getty
Income per sec :$7.40
Average income of the year : $230,000,000

29. Bidz
Founders : Garry Itkin
Income per sec :$6.70
Average income of the year : $200,000,000

30. NYTimes
Founders : Henry Jarvis Raymond
Income per sec :$6.00
Average income of the year : $175,000,000 

மச்சு-பிச்சு மலை மர்மம்
தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள்,பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிமறிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது.




1911ம் ஆண்டுஅமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்குஇடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார்.

மச்சு-பிச்சு மலை மர்மம்


பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் 3புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்திபச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.

சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ் படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள். இதனால் அது சேதப்படாமல் தப்பியது.

நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்தஇன்கா மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டுவதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட்டப்பட்டன. இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து,பின்னர் பழைய நிலைக்கே திரும்பி விடுமாம். இரு கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை அமைத்துள்ளனர். கதவு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில் கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில அதிர்வுகளை தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.


மச்சு-பிச்சு மலை மர்மம்


மச்சுபிச்சுமலை மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3 முக்கிய கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக்கருதப்படுகிறது. சூரியனை நோக்கி நடப்பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும் நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாய தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும்செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.


இந்நிலையில் பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது. அதற்கு பின்னர் பலநூற்றாண்டுகள் அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது.1911ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவை பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983 ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது. 2007ல் யுனெஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வானது. பெருநாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது.


மச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள், வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல்பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்கழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதியில்லை என சாக்கு கூறி யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.


மச்சு-பிச்சு மலை மர்மம்



கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும், மச்சுபிச்சு பகுதியில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன.


இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக பெண்களை கொலை செய்ய என்ன அவசியம் வந்தது?


மச்சுபிச்சு மர்மம் இன்றளவும் தொடர்கிறது………..!!

ஆற்றின் அடியில் 27 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, புதிய ரயில் சேவையை சீனா தொடங்க உள்ளது.


சீனாவில் 6 ஆயிரத்து 300 கிலோ மீற்றர் நீளத்துக்கு யாங்ட்சே ஆறு பாய்கின்றது.
உலகின் 3வது நீளமான யாங்ட்சே ஆறு, வடமேற்கு சீனாவின் குவிங்கய் மாகாணத்தில் உற்பத்தியாகி 10 மாகாணங்களை கடந்து கிழக்கு சீனாவில் சங்கமம் ஆகிறது.
இந்த ஆற்றின் அடியில் 29 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, உச்சாங் - ஹாங்கு நகரங்களுக்கிடையே புதிய சுரங்க ரயில் சேவையை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் வீதம், நாளொன்றுக்கு 26 ரயில்கள் இயக்கப்படும்.
நாளொன்றுக்கு 5 லட்சம் மக்கள் இந்த ரயில் சேவையின் மூலம் பயனடைவார்கள் என சீன அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 2வின் மிகப்பெரிய வர்த்தக வெற்றியைத்தொடர்ந்து அடுத்ததாக களமிறக்கப்போவதும் கேலக்ஸி வரிசையில் தானாம். இதற்க்கு சாம்சங், கேலக்ஸி நோட் 3 எனவும் பெயரிட்டிருக்கிறார்கள்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 2வின் மிகப்பெரிய வர்த்தக வெற்றியைத்தொடர்ந்து அடுத்ததாக களமிறக்கப்போவதும் கேலக்ஸி வரிசையில் தானாம். இதற்க்கு சாம்சங், கேலக்ஸி நோட் 3 எனவும் பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த 6.3 அங்குல திரைகொண்ட ஸ்மார்ட்போன் / பேப்லட்டை எதிர்வரும் புத்தாண்டில் வரும் CES 2013 என்ற நிகழ்ச்சியில் வெளியிடலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மிகப்பெரிய திரைகொண்ட ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்குமாம். பல சிறப்பம்சம்களை தன்னகத்தே கொண்டது. மேன்படுத்தப்பட்ட தரமும் கொண்டிருக்குமாம் இது.

இதன் தொழில்நுட்பக்கூறுகள் என்றுபார்த்தால்,
  • 6.3 அங்குல தொடுதிரை,
  • ஆன்ட்ராய்டு 5.5,
  • 16 எம்பி கேமரா,
  • 3 ஜிபி ரேம்,
  • 220 கிராம்கள்,
  • விலை பற்றித்தெரியவில்லை.

உலகளவில் தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது.




தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தங்கம் உற்பத்தியில் சீனா முதன்மை நாடாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும், 323 டன் தங்கம் உற்பத்தி செய்துள்ளதாக தங்க உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட 11 சதவிகிதம் அதிகமாகும்.
இருப்பினும் உலகளவில் அதிக தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இன்று வரை இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.


ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்
சில மாதங்களுக்கு முன்புதான் ஐபோன் 5 வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் பயனாளர்கள் அடுத்த ஐபோன் வடிவமைப்பை காண ஆர்வத்துடன் உள்ளனர். இந்த மாதிரி வடிவமைப்புகள் புதிய போனுக்கான மாதிரிகளை மிகைப்படுத்தும்.

இந்த ஐபோன் 6, ஐஒஸ் இயங்குதளம், A6 சிப் என்ற ப்ராசெசர் மற்றும் அசத்தல் தொழில்நுட்பம்கொண்ட தொடுதிரை ஆகிவற்றை கொண்டிருக்கும்.

iPhone 6 -2

iPhone 6 -2

வடிவம் மற்றும் திரை: இது ஐபோன் 5வைப் போன்றே இருக்குமென்றாலும் இதன் திரை 1080பி அளவுகொண்ட 1917 x 1080 பிக்செல்களில் இருக்கும்.

ப்ராசெசர்: இந்த ஐபோன் 6 குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் A15 ப்ராசெசர் பயன்படுத்துகிறது.

கேமரா: 2013ல் வரப்போகும் இந்த போனின் கேமரா 13 எம்பி மற்றும் 12 எம்பிகளில் இருக்குமாம்.

இயங்குதளம்: இதில் ஐஒஸ் 7 என்ற தரம் உயர்த்தப்பட்ட இயங்குதளம் உபயோகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 6 -7

iPhone 6 -7

iPhone 6 -8

iPhone 6 -8

iPhone 6 -3

iPhone 6 -3

iPhone 6 - 1

iPhone 6 - 1

iPhone 6 -4

iPhone 6 -4

iPhone 6 -5

iPhone 6 -5

Phone 6 -9

iPhone 6 -9


கேலக்ஸி நோட்டின் ‘ஜெல்லி பீன்’ அப்டேட்
நீண்ட நாட்களாக எதிர் பார்த்த கேலக்ஸி நோட்டுக்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இப்பொழுது கிடைக்கிறது. சிலதினங்களுக்கு முன் சாம்சங், கேலக்ஸி நோட் பயனாளர்களுக்கு ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீன் 4.1க்கான அப்டேட்டை வெளியிட்டது. இதிலுள்ள நல்ல செய்தி என்னவெனில் இந்த அப்டேட்டை இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை பயனாளர்கள் மட்டுமே பெறமுடியும்.
ஜெல்லிபீன் அப்டேட் செய்வதால் தரம் உயர்த்தப்பட்ட உலவி மற்றும் பல பலன்களைப் பெறமுடியும். மேலும் ஒரே நேரத்தில் வேறுசில அப்ளிகேசன்களையும் திறக்கும் வகையிலான “மல்ட்டி விண்டோவ்” என்ற வசதி மற்றும் மல்ட்டி ப்ராசஸ் வசதியும் உள்ளது.

இதில் ப்ரீமியம் சூட் என்ற வசதியின் மூலம் பின்வரும் வசதிகளை பெறமுடியும்:
வீடியோ / உலவி : பாப்-அப் நோட் என்ற வசதி பயனாளர்களை எளிதில் எழுதவும், தொலைபேசி எண்களை பதியவும் பயன்படுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் இணையத்துக்கான உலவியையும் பெறமுடியும்.

எஸ்-பிளானர் / ஈமெயில்: கையால் எழுத்தப்பட்ட குறிப்புகளையும் தகவல்களையும் ஈமெயில் செய்யும் வசதியையும் வழங்கியுள்ளது.

ஒன்லைன் மூலம் ஓவியங்கள் மற்றும் ஏனைய வரைபடங்களை உருவாக்கிக்கொள்வதற்கு பல்வேறு இணையத்தளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றினை ஒரே நேரத்தில் ஒரு பயனரால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் Web Whiteboard எனும் தளமானது ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் இணைந்து ஆக்கத்திறன்கூடிய ஓவியங்களை உருவாக்கிக் கொள்ளும் வசதியை தருகின்றது.
இதற்காக இத்தளத்தில் Invite எனும் அம்சம் தரப்பட்டுள்ளது.
அத்துடன் Drawing Pencil, Brush Size, Text, Eraser, Color Selector போன்றவற்றுடன் சேமிப்பதற்கான வசதியும் காணப்படுகின்றது.
Tablets மற்றும் Smartphone போன்றவற்றிலும் தொழிற்படக்கூடியதாகக் காணப்படும் இத்தளத்தில் உருவாக்கப்பட்ட படங்களை சமூக இணையத்தளங்களில் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.


இணையத்தள முகவரி


சாம்சங்கின் அடுத்த தயாரிப்பு கேலக்ஸி S4
சாம்சங் கேலக்ஸி வரிசையில் வந்த S3-யின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து 2013ல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S4 தயாரிப்பில் இறங்கப்போகிறதாம்.

அன்மை தகவல்களின்படி, இந்த கேலக்ஸி S4ஆனது ஆன்ட்ராய்டு 5 இயங்குதளம் மற்றும் 1.8 GHz குவாட்-கோர் கார்டெக்ஸ் A9 ப்ராசெசரும் கொண்டிருக்குமாம்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக யூட்யூப் என்ற இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் டெமோ என்ற செய்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.

முன்னர் பார்த்திராத அளவுக்கு அழகிய வடிவமைப்பும் தொழில்நுட்பமும் கொண்டது. இது தற்போதைய கேலக்ஸி S4 மற்றும் ஐபோன் 5வை விட சிறப்பானதாக இருக்குமென்கிறது வீடியோ காட்சிகள்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 4 (GT-I9500) சிறப்பம்சங்கள்:
  • 1080பி AMOLED சிறப்புத்திரை,
  • 13 எம்பி கேமரா,
  • 2.0 GHz நான்கு குவாட் ப்ராசெசர்,
  • ஆன்ட்ராய்டு 5 கீ லைம் பை,
  • 2 ஜிபி ரேம்,
  • 16 / 32 / 64 / 128 ஜிபி உள்நினைவகங்கள்,
  • 4ஜி,
2013ல் வெளியாகும் இந்த ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் உங்களுக்காக.
Related Posts Plugin for WordPress, Blogger...

Loading...


apple watch

ஆப்பிள் நிறுவனத்தைப்பற்றி தினமும் பலவிதமான வதந்திகள் வருவது சாதரணமான உண்மைதான். ஐபோன் மற்றும் ஐபேட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் அடுத்ததாக ஆப்பிள் டிவி தயாரிக்கப்போவதாக கடந்த வாரம் வதந்திகள் கிளம்பியது. அனால் தற்பொழுது அதுவும் உண்மை இல்லை என்கின்றனர் இந்த துறையில் உள்ள சில வல்லுனர்கள்.

மேலும் ஆப்பிள் அடுத்ததாக தயாரிக்கப்போவது கைக்கடிகாரம் தானாம். இதை சில நம்பத்தகுந்த வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

இந்த ஆப்பிள் கடிகாரம் 1.5 அங்குல திரைகொண்ட ப்ளுடூத் வசதிகொண்ட கணினியாக செயல்படும். இதில் ஐஒஸ் இயங்குதளம் அடிப்படையாக இருக்கும். எனவே இது கணிப்பொறியின் சிறப்பம்சம்கள் கொண்ட கடிகாரமாக இருக்கும்.

இதை தயாரிப்பதற்காக ஆப்பிள், 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இதன் தொழில்நுட்பக்கூறுகள்:
  • 1.5 அங்குல OLED திரை,
  • ஐஒஸ் இயங்குதளம்,
  • தரமுள்ள புகைப்படங்கள்,
  • தற்பவெப்பம் சார்ந்த தகவல்கள்,
  • இன்னும் சில சிறப்பம்சங்களும் உள்ளன.


தரமான வால்பேப்பர்களின் தொகுப்பு
எல்லோரும் தங்களது வீட்டுக்கணினி, டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு வால்பேப்பர்ககளை[New HD Wallpapers] தோடுவது வழக்கம். நல்ல தரமுள்ள வால்பேப்பர்களை வைத்திருக்கவே அனைவரும் விரும்புவர். அதிலும் சிலருக்கு புதிய வகை வால்பேப்பர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
உங்களைப்போன்றவர்களுக்காக நாங்கள் இங்கே சில அதிக தரமுள்ள வால்பேப்பர்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளோம். தேவையானதை நீங்கள் தரவிறக்கம் [டவுன்லோட்] செய்துகொள்ளுங்கள்.
வால்பேப்பர் #part 1:

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்

நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்


குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின் பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்,இந்த சிறப்புப் பதிவு.அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின் அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால் நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.


அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்) கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும் முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத் தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம் இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.