KPCB என்ற இணையதளத்தை நடத்துபவர்களில் ஒருவரும், இணைய வல்லுனருமான “மேரி மீகர்” என்பவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை முழுவதும் இணையத்தைப்பற்றியதும், பயனாளர்களை மதிப்பிடுவதுமாகும். இந்த அறிக்கையின் பெயர் “
2012 KPCB இன்டர்நெட் ட்ரெண்ட்ஸ் இயர்-என்ட் அப்டேட்.”
88 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் சில முக்கிய தகவல்கள் இங்கே,
இந்தியாவில் 2008-2012 ஆகிய ஆண்டுகளில்தான் 8.8 கோடி இணையப் பயனாளர்கள் அதிகரித்து, தற்பொழுது இது 13.7 கோடியாக உள்ளது. ஏறக்குறைய இது 26 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் மக்கள் தொகைப்பெருக்க விகிதம் சுமார் 11 மட்டுமே.
சீனாவில் இந்த விகிதம் பல மடங்குகளாக உள்ளது. அங்கு 53.8 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் 240 கோடி இணையப்பயனாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2012ன் கடைசி காலாண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 4.4 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் வளர்ச்சி விகிதம் 52 சதவிகிதமாகும். சீனாவில் அதிகபட்சமாக 27 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருப்பதாகவும் அதன் வளர்ச்சி விகொதம் 50 சதவிகிதம் எனவும் இதே அறிக்கை குறிப்பிடுகிறது.
இதைப்போலவே கைப்பேசியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் விகிதமும் பன்மடங்காயிறுப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
KPCB என்ற இணையதளத்தை நடத்துபவர்களில் ஒருவரும், இணைய வல்லுனருமான “மேரி மீகர்” என்பவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை முழுவதும் இணையத்தைப்பற்றியதும், பயனாளர்களை மதிப்பிடுவதுமாகும். இந்த அறிக்கையின் பெயர் “2012 KPCB இன்டர்நெட் ட்ரெண்ட்ஸ் இயர்-என்ட் அப்டேட்.”
88 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் சில முக்கிய தகவல்கள் இங்கே,
கருத்துரையிடுக