A+ A-

ஈபே தளத்தில் ரூ.13,999க்கு விற்கப்படும் லெனோவாவின் ஐடியா டேப்லெட்


சில தினங்களுக்குமுன் லெனோவா நிறுவனம் தனது ஐடியா டேப் என்ற புதிய டேப்லெட் கணினியை வெளியிட்டது. இதன் வெளியீட்டின் வர்த்தகக் குறியீடானது A2107 ஆகும்.

இந்த டேப்லெட் இப்பொழுது ஈபே என்ற இணையத்தில் ரூ.13,999க்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்த லெனோவா ஐடியா டேப் A2107 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லெனோவாவின் ஐடியா டேப்பின் நுட்பக்கூருகளாவன:
  • 7 அங்குல திரை,
  • 1024 x 600 பிக்ஸல் ரெசொலூசன்,
  • 1 GHz கார்டெக்ஸ் A9 ப்ராசெசர்,
  • 512 எம்பி ரேம்,
  • 16 ஜிபி உள்நினைவகம்,
  • மைக்ரோ SD,
  • ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
  • Wi-Fi, 2ஜி, 3ஜி
  • ப்ளுடூத் வசதி,
  • விலை ரூ.16,990