A+ A-

“உலகம் அழிந்து விடும்” பீதியை கிளப்பிய 93 பேர் கைது

இந்த வாரம் உலகம் அழிந்து விடும் என துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பீதியை கிளப்பிய 93 பேர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.




தென் அமெரிக்காவில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மாயன் இனத்தவரின் காலண்டரில் 21.12.2012 உலகம் அழியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
உலக முழுவதும் இந்த காலண்டரின் கருத்தை நம்பும் பலர், உலகம் அழிவதை தடுப்பதற்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவில் “அல்மைட்டி காட்” என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், இந்த வாரம் உலகம் அழிந்து விடும், எனவே இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் ஒப்படைத்து விட வேண்டும் என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் சீனாவின் புஜியான், ஹூபி, சின்ஜியாங், குங் காய் உள்ளிட்ட பல மாகாணங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களை பீதியடைய செய்ததற்காக இந்த அமைப்பை சேர்ந்த 93 பேரை சீன பொலிசார் கைது செய்துள்ளனர்.