A+ A-

“கங்ணம் ஸ்டைல்” நூறுகோடி முறை பார்க்கப்பட்ட முதல் வீடியோ!


கொலைவெறி உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் ஆர்ப்பரிக்கும் ஆரவாரத்தோடு ஒரு பாடல் ஆடலோடு மிகவும் பிரபலமாகியுள்ளது. அதுதான் கங்ணம் ஸ்டைல். தென்கொரிய பாப் பாடகர் PSY ஆடிப்பாடி வெளியிட்ட பாடல் தான் இந்த கங்ணம்.
கங்ணம் ஸ்டைல் பற்றித்தெரியாத ஒரு குழந்தைகூட ஊரிலில்லை எனும் அளவுக்கு பட்டயைக்கிளப்பியுள்ளது. இந்த பாடல் பிரபலமடைய கிரிக்கெட் விளையாட்டு வீரர் “கெயில்” முக்கியக்காரணம். அவர் மினி வேர்ல்ட் கப்பில் போட்ட குத்தாட்டத்தின் விளைவே இந்த மாபெரும் சாதனைக்கு மேலும் வலுச்சேர்த்தது என்றே சொல்லலாம்.
இந்த கங்ணம் ஸ்டைல் வீடியோ உலக சாதனை புரிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்று இந்த பாடலின் யூட்யூப் வீடியோ 100 கோடி பார்வைகளை கடந்தது. யூட்யூபில் 100 கோடி வியூவ்ஸை பெற்ற முதல் வீடியோ இதுதானாம்.

யூட்யூப்பில் கலக்கி வரும் அந்த வீடியோவைக் காண இங்கே சொடுக்கவும்.