A+ A-

“கோடெக்” நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்



கோடெக் என்ற இந்தியாவை சேர்ந்த நிறுவனம் புதிதாக ஃபன்டேப் என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டை உருவாக்கியுள்ளது. இந்த டேப்லெட் 7 அங்குல அளவில் இருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு 4.0வின் ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

இணையப்பயன்பாடு இதில் மிகவும் சிறப்பாக இருக்கும். இணையத்திற்காக இதில் ஒபேரா என்ற உலவி பயன்படுத்தப்படுகிறது. “கோடெக்” நிறுவனத்தின் இந்த ஃபன்டேப் என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட் அனைத்து இணையச்சந்தைகளிலும் கிடைக்கிறது.

இதன் நுட்பக்கூறுகள்:
  • 7 அங்குல திரை,
  • ஆன்ட்ராய்டு 4.0,
  • 1 GHz ப்ராசெசர்,
  • 512 எம்பி ரேம்,
  • 0.3 எம்பி கேமரா,
  • WiFi, 3ஜி மற்றும் USB 2.0,
  • 4 ஜிபி உள்நினைவகம்,
  • விலை ரூ.3,999