A+ A-

ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

ஒன்லைன் மூலம் ஓவியங்கள் மற்றும் ஏனைய வரைபடங்களை உருவாக்கிக்கொள்வதற்கு பல்வேறு இணையத்தளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றினை ஒரே நேரத்தில் ஒரு பயனரால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் Web Whiteboard எனும் தளமானது ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் இணைந்து ஆக்கத்திறன்கூடிய ஓவியங்களை உருவாக்கிக் கொள்ளும் வசதியை தருகின்றது.
இதற்காக இத்தளத்தில் Invite எனும் அம்சம் தரப்பட்டுள்ளது.
அத்துடன் Drawing Pencil, Brush Size, Text, Eraser, Color Selector போன்றவற்றுடன் சேமிப்பதற்கான வசதியும் காணப்படுகின்றது.
Tablets மற்றும் Smartphone போன்றவற்றிலும் தொழிற்படக்கூடியதாகக் காணப்படும் இத்தளத்தில் உருவாக்கப்பட்ட படங்களை சமூக இணையத்தளங்களில் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.


இணையத்தள முகவரி