A+ A-

தங்கத்தை உற்பத்தி செய்வதில் உலகளவில் சீனா முதலிடம்

உலகளவில் தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது.




தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தங்கம் உற்பத்தியில் சீனா முதன்மை நாடாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும், 323 டன் தங்கம் உற்பத்தி செய்துள்ளதாக தங்க உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட 11 சதவிகிதம் அதிகமாகும்.
இருப்பினும் உலகளவில் அதிக தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இன்று வரை இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.