தற்போதைய வதந்திகள் மற்றும் வல்லுனர்களின் கூற்றுகளின் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆனது கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ (ஜனவரி 13) மற்றும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (பிப்ரவரி 13) ஆகிய இரு பெரும் நிகழ்ச்சிகளிலும் வெளியிடப்பட போவதில்லையாம். ஆனால் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்த சாம்சங் எதோ முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எதிர்வரும் புதுவருடத்தின் ஆரம்பத்தில் சாம்சங் ஒரு புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அதன் பெயர் “கேலக்ஸி ஃபிரேம் ” எனவும் கூறுகின்றனர்.
ஆனால் நம்மால் சொல்லமுடிந்த உண்மை என்னவெனில், இந்த கேலக்ஸி ஃபிரேம் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும். அது GT-S6810 ஆகும். இது கேலக்ஸி ஏஸ் போன்ற சில தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டதாகும்.
2012ன் பத்து சிறந்த போன்கள்
கேலக்ஸி ஃபிரேமின் சில நுட்பக்கூறுகளாவன ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளம், Wi-Fi, அதிநவீன கேமரா, HD வீடியோ மேலும் பல.
இதுதொடர்பான பல்வேறு தகவல்களை விரைவில் தருகிறோம். இணைந்தே இருங்கள்
கருத்துரையிடுக