விண்வெளியில் குறுங்கோள் ஒன்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது சீனாவின் சாங்கி-2 விண்வெளி ஓடம்.
தற்போது பூமியிலிருந்து 70 லட்சம் கிலோமீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருந்த "தெளடாட்டிஸ்" என்ற குறுங்கோளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
சூரியனை சுற்று வரும் குறுங்கோள்களை புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்வதற்காக சாங்கி-2 என்ற விண்வெளி ஓடத்தை சீனா அனுப்பியது.
குறுங்கோளிலிருந்து 3.2 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தபடி எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் துல்லியமாக இருந்ததாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் ஜனவரிக்குள் பூமியிலிருந்து ஒரு கோடி கிலோமீற்றர் தூரம் வரை உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் பணியில் சாங்கி-2 ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 5 கிலோமீற்றர் தூரம் நீளமுள்ள தெளடாட்டிஸ் குறுங்கோள், பூமி மீது மோதினால் கடும் அழிவுகளை ஏற்படுத்திவிடும்.
எனினும் இப்போது வெகுதூரத்தில் சுற்றிவருவதால், பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக