A+ A-

பஸ் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

பிற நகரங்களிலிருந்து தமிழகம் வருவதானாலும் சரி, தமிழகத்தின் பிற இடங்களுக்குச் செல்வதானாலும் சரி நாம் பேருந்தை நடவேண்டியது மிகவும் அவசியம். கல்லூரி மாணவ மாணவிகளோ, பிசினசில் உள்ளவர்களோ, வேறு மாநிலங்களுக்குச் செல்வதற்கு நெரிசல் இல்லாத விரைவுப்பேருந்துகளைப் பயன்படுத்தியேதான் ஆகவேண்டிய நிலை!

அதிக நேரம் காத்திருக்காமல் மற்றும் நெரிசலிலாமல் செல்வதற்கு பேருந்திற்கான டிக்கெட்டை முன்பே பதிவுசெய்வது மிகவும் அவசியம். இந்த டிக்கெட்டை முன்பே அதுவும் ஆன்லைனில் பதிவுசெய்வதெப்படி என இங்கே பார்க்கலாம்.

பல தனியார் பேருந்துகள் இந்த வசதியைத் தருகின்ற நிலையில், தமிழக அரசும் அதற்கான வழிவகை செய்துள்ளது. அதிலும் நீங்கள் தொலைபேசியின் இணைய அமைப்புமூலம் கூட இந்த வசதியைப்பெற முடியுமென்பதே சிறப்பம்சம்.

படி 1: முதலில் இணைய வசதிபெற்ற கணினியை திறந்து, தமிழக அரசின்பேருந்துக்கலகத்தின் இணையதளத்திற்கு செல்லவும்.

படி 2: பின்னர் அந்த தளத்திலுள்ள மெனுவிலிருந்து “இ-டிக்கெட் லாகின்” என்பதைச் சொடுக்கவும்.

படி 3: பின்னர் வரும் திரையில் உங்களுக்கான பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைத் தரவேண்டும். அல்லது உங்களுக்கு முன்னர் பயனாளர் கணக்கு இல்லையென்றால் புத்தாக ஒரு கணக்கைத் தொடங்கவும். புதிய பயனாளர் கணக்கு தொடங்குவதென்பது இஇலவசமான ஒன்றே.

படி 4: பின்னர் நீங்கள் செல்லவேண்டிய இடத்தைக் கொடுத்து பேருந்துகளில் இருக்கைகள் உள்ளனவா எனச் சரிபார்த்து பின் கட்டணம் தொடர்பான அடுத்த படியைத் தொடரவும்.

படி 5: மறக்காமல் டிக்கெட்டைப் ப்ரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

கைபேசியின் SMS மூலமும் இந்தச் சேவை கிடக்கிறது. மேலும் விபரங்களுக்கு பின்வரும் தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் தொலைபேசியைத் தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி எண் : 044 – 25 36 46 56