சமூக வலைத்தளங்களில் மற்றுமொரு மாபெரும் சக்தியாக திகழும் ட்விட்டர் இணையத்தளம் புதிய சேவையொன்றை தொடங்கியுள்ளது. அதாவது, நீங்கள் ட்விட்டெரின் நீண்டநாள் பயனாளராக இருந்தால் உங்களுடைய பழைய ட்வீட்டுகளையும் எளிதில் எளிதில் தரவிறக்கம் செய்யலாம்.
ஏதாவது முக்கியமான ட்வீட்டுகள் இருந்தால் அவற்றை தரவிறக்கம் செய்ய இந்த டூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டவுன்லோட் செய்த ட்வீட்டுகளை மாதம்வாரியாகப் பிரித்துப்பார்க்க முடியும்.
தரவிறக்கம் செய்யப்படும் தகவல்கள் ஸ்ப்ரெட்சீட் என்ற மாதிரியில் சேமிக்கப்படும்.
இதை எப்படிப்பெருவது?
படி 1: பயனாளர்கள் ட்விட்டர் கணக்கின் உள்நுழையவேண்டும்.
படி 2: பின்னர் செட்டிங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமைப்பு முறைக்குச் செல்லவேண்டும்.
படி 3: அந்த பக்கத்தின் கீழே, ட்விட்டர் அர்சிவ்க்கான தேர்வு ஒன்று இருக்கும் அதன் மூலம் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.
படி 4: உங்களுக்கு ட்விட்டர் தளத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெறும். இதில் தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதைப்பின்பற்றினால் பல ட்வீட்டுகள் எல்லாம் அப்படியே தரவிறக்கம் செய்யப்படும். அனால் இந்த அமைப்பு வசதிகள் தற்சமயத்தில் ஆங்கிலம் முதல் மொழியாகக்கொண்ட கணக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக