பிஎஸ்என்எல் என்றழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிட், தற்பொழுது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கான நான்கு சிறப்புச் சலுகைகளை வெளியிட்டது. இந்த புதிய சலுகைகளைப் பயன்படுத்தி உள்ளூர் அழைப்புகளை ஒரு நிமிடத்திற்கு வெறும் 20 பைசாவில் பேசமுடியுமென இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் இந்நிறுவனம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கான கட்டணங்களையும் குறைத்துள்ளது.
பயனாளர்களுக்கான உள்ளூர் கட்டணங்கள் தொடர்பான சிறப்பு சலுகைகளை ரூ.39 மற்றும் ரூ.107க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமும், வெளியூர் கட்டணங்கள் தொடர்பான சிறப்பு சலுகைகளை ரூ.43 மற்றும் ரூ.111க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமும் பெற முடியும்.
முதன் முதலில் இந்த சலுகைகள் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சலுகைகள் மூன்று மாதங்களுக்குப் பொருந்துமாம். தமிழகத்திற்கு இந்த சலுகைகள் அறிமுகப்படுத்தும்பொழுது விலைகளில் மாற்றங்கள் இருக்கலாமெனத் தெரிகிறது.
மேலும் இந்நிறுவனம் இணையப் பயன்பாடிற்காக 2G மற்றும் 3G பயன்படுத்தும் மோடம் என்ற கருவியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
“என்னதான் இருந்தாலும் – சேவை சரியில்லை” என்கிறது ஒரு தரப்பு!
கருத்துரையிடுக