A+ A-

பேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட வீடியோக்களை வலைத்தளங்க​ளில் பயன்படுத்து​வதற்கு


முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது நண்பர்களை இணைத்து வைத்திருப்பதுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவும் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் புதிது புதிதாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான வீடியோக்களை வலைத்தளங்களில் பயன்படுத்துவதற்கான வசதியினை தற்போது பேஸ்புக் தளம் தருகின்றது.
இதற்கு பேஸ்புக் தளத்தினுள் உங்கள் கணக்குகளை பயன்படுத்தி உள்நுளைந்து பகிரப்படவேண்டிய வீடியோவினை தெரிவு செய்யவும். அதன் பின்னர் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Embed Video எனும் இணைப்பினை கிளிக் செய்யவும். இதன் போது Pop-Up Window ஒன்றில் தோன்றும் Embed Code - இனை பிரதி செய்து வலைத்தளத்தில் இணைத்துக்கொள்ளவும்.