அமெரிக்காவின் ரிச்சர்ட் பிரான்சன் விமான நிறுவனம், மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்து இருந்தது.
இதற்கான கட்டணம் தலா ரூ.1 கோடியே 10 லட்சம் என்றும் நிர்ணயித்தது. இதனையடுத்து ஏராளமானவர்கள் முன்பதிவு செய்தனர்.
இதனையடுத்து புதிய விசேட விண்லகம் தயாரிக்கப்பட்டது. அதிவேக சக்தி கொண்ட இந்த விண்கலத்தல் 2 விமானிகள் உட்பட 6 பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ய முடியும்.
இந்நிலையில் தற்போது இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவ் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இத்தகவலை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜார்ஜ் ஒயிட்சைட்ஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக