தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர். |
புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது. ஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில மஞ்சள் மழை பெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
கருத்துரையிடுக