சூரியனை பல்வேறு குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்று வட்ட பாதையை விட்டு விலகும் பட்சத்தில் பூமியின் மீது தாக்கும் அபாயம் உள்ளது. இவற்றை விண்கற்கள் என அழைக்கிறோம்.
பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்கள் புவிஈர்ப்பு விசை காரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன.
இவ்வாறான விண்கற்கள் இதுவரையிலும் குறைந்த அளவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அபோபிஸ் என்ற இராட்சத விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் கடந்த 2004ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விண்கலம் 2029ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விண்கல் பூமியை தாக்காது, வரும் வழியில் புவி ஈர்ப்பு வட்டத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக