தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய பகுதியில் பார்ப்போம்.
Google Play vs App Store:
நண்பர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்:
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது ஆப்பிள் மேப் தான். இதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மேப் அப்ளிகேசனில் ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் ஆப்பிள் அப்டேட்:
கூகுள் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான யூட்யூப் அப்ளிகேசனையும், ஜிமெயில் அப்ளிகேசனையும் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது.
மொபைல் உலகில் யாஹூ:
இணையத்தில் ஜாம்பவனாக ஒரு காலத்தில் (?) திகழ்ந்த யாஹூ நிறுவனம் பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தது. சமீபத்தில் யாஹூ நிறுவனத்தின் புது சிஇஓ-வாக மரிஸ்ஸா மேயர் என்பவர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறார். தற்போது On The Air என்னும் மொபைல் வீடியோ சாட் நிறுவனத்தை கையைகப்படுத்தியுள்ளார். இந்த முறை கையகப்படுத்தியது On The Air தயாரிப்புக்காக இல்லை, மாறாக அதன் மென்பொருள் உருவாக்குனர்களுக்காக இதனை செய்துள்ளது. அதனை உருவாக்கிய ஐந்து பேர் இனி யாஹூவின் மொபைல் பிரிவில் பணிபுரிவார்கள்.
கருத்துரையிடுக