ஆம்! இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளை இன்னும் சில தினங்களில் செல்போனில் கூடப் பார்க்கலாமென அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தச் சேவை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு தொடங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் பிரிகேடியர் வி.ஏ.எம். ஹுசைன் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது.
பிரசார் பாரதி என்ற இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் டி.டி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளும் பல நவீன மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு பல புதிய செய்திகளை உடனுக்குடன் நவீன தரத்தில் வெளியிடவிருப்பதாகவும் திரு.வி.ஏ.எம். ஹுசைன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இணையான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை இனிமேல் தூர்தர்ஷனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அடித்தளமாக யூடியூப் மற்றும் செல்போன்களில் நிகழ்ச்சிகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.”
சில குழுக்களை அமைத்து பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நம் நாட்டிலேயே அதிக வருவாய்பெரும் சில வானொலி நிலையங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. இதை நவீனப்படுத்துவதுடன் டிஜிட்டல் மயமாக்கப்படும். “டிஜிட்டல் ரேடியோ’ ஒலிபரப்புக்காக அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்கள் எனப்படும் நவீன சாதனங்கள் வாங்கப்பட உள்ளன. இதன் மூலம் எஃப்எம் வானொலிகளுக்கு இணையான தரத்தைப் பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை “ஒளியும் ஒலியும்” செய்தாலே அது மாபெரும் வெற்றியும்பெரும். இதன் மூலம் அதிக வருவாய் மற்றும் பார்வையாளர்கள் கிடைக்கப்படுமென்பதே நமது கருத்து.
கருத்துரையிடுக