A+ A-

விளம்பரங்களை விமர்சனம் செய்ய ஒரு இணையம்

விளம்பரங்களை விமர்சனம் செய்வதற்கென Adyapper என்று ஒரு இணையத்தளம் உள்ளது.


விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த தளம் எந்த ஒரு விளம்பரத்தின் மீதும் உங்கள் பங்கிற்கு கருத்தை சொல்லலாம் என அழைக்கிறது.
கருத்து என்பது விருப்பமாக இருக்கலாம்,வெறுப்பாக இருக்கலாம், காட்டமான விமர்சனமாக கூட இருக்கலாம்.
இதற்கு உதவும் வகையில் இந்த தளத்தில் பிரபலமான விளம்பர வீடியோக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உங்களுக்கு தேவையான விளம்பரத்தை கிளிக் செய்து அந்த விளம்பரம் தொடர்பான கருத்தை பதிவு செய்யலாம்.
விளம்பரம் பிடித்திருந்தால் முதலில் பேஸ்புக் பாணியில் லைக் செய்து விடலாம். இல்லை வெறுத்து விடலாம்.
அதன் பிறகு விளம்பரத்தின் உள்ளடக்கம் அல்லது உருவாக்கத்தில் ஏதேனும் ஆட்சேபம் அல்லது எதிர் கருத்து இருந்தால் அதனையும் பதிவு செய்யலாம்.
நுகர்வோர் கருத்திற்கேற்ப அதிகம் விரும்பப்பட்ட, வெறுக்கப்பட்ட விளம்பரங்களையும் இங்கே பார்க்கலாம்.
இந்த தளம் விளம்பரங்கள் மீது கருத்து சொல்லும் அதிகாரத்தை நுகர்வோருக்கு வழங்குவதோடு, அதன் வாயிலாக தங்கள் விளம்பரங்கள் பற்றி பொது மக்களின் கருத்துக்களை நிறுவனங்களும் அறிந்து கொள்ள வழி செய்கிறது.