A+ A-

இனிமேல் Facebook Messanger-ல் SMS அனுப்பலாம்

இனிமேல் Facebook Messanger-ன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம்.
இந்த புதிய Facebook Messanger Application-னை முதலில் இந்தியா, இந்தோனேசியா, வெனிசுலா, அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்கு, சிறப்பு சலுகையையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அதிகமான பயனாளர்கள் இணைவதுடன், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமென செல்போன் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.