உங்கள் செல்போன் மூலம் , இந்தியாவில், ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிந்துகொள்ள ரயில்வே நிர்வாகம் எளிய முறையில் வசதியை அளித்துள்ளது.
1. ரயில் வரும் நேரம், இடம் , புறப்படும் நேரம், ஆகியவற்றை அறிந்து கொள்ள
ரயில் வரும் நேரம், தற்போது ரயில் வந்து கொண்டு இருக்கும் இடம், புறப்படும் நேரம் , சென்றடையும் நேரத்தை அறிய உங்களது செல் போனில் spot என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு வண்டி எண் XXXXX செய்து 139 -க்கு அனுப்பினால், உடனே அறிந்து கொள்ளலாம். மேலும், தாமதமாக வரும் ரயில் குறித்த விவரங்களையும் கூட அறியலாம்.
2. முன் பதிவு நிலையை அறிந்து கொள்ள
உங்களது செல்போனில் PNR என டைப் செய்து 10 இலக்க PNR எண்ணை குறிப்பிட்டு, 139 -க்கு அனுப்பினால், முன் பதிவு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
3. இட வசதி நிலையை அறிந்து கொள்ள
உங்களது செல்போனில் SEAT , வண்டி எண், பயண தேதி, புறப்படும் இடம், STD கோட் எண், ரயில் பயணம் செல்லும் வகுப்பு, கோட்டா , ஆகியவற்றை டைப் செய்து 139 -க்கு அனுப்பினால் இருக்கை குறித்த விவரங்கள் கிடைக்கும்.
4. பயண கட்டணம் குறித்த விவரம் அறிந்து கொள்ள
உங்களது செல்போனில் FARE என டைப் செய்து, ரயில் புறப்படும் இடம் ,தேதி, சேரும் இடம், வகுப்பு ஆகியவற்றை குறிப்பிட்டால் கட்டண விவரம் உடனே கிடைத்துவிடும்.
இனி என்ன? கவலையைவிடுங்க, செல்போன் எடுங்க. தகவலை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக