இந்திய அரசு வெளியிட்ட குறைந்த விலை டேப்லெட்டான “ஆகாஷ்”-ன் அடுத்த பதிப்பான 3 வெளிவரும் நிலையில் உள்ளது. இந்த ஆகாஷ் 3 டேப்லெட்டில் சிம் போடும் வசதியும் மேலும் பல அப்ளிகேசன்களை பயன்படுத்தும் வகையில் வெளியாக உள்ளது.
இந்த குறைந்த விலை டேப்லெட் கணினியில் பேசும் வசதியும் கிடைக்கப்பெறும் என்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இதன் விலையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்குமாம்.
இந்த அடுத்த பதிப்பில் 50 லட்சங்களுக்கும் மேலான டேப்லெட்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது 2013னின் பிப்ரவரி மாதம் முதல் சந்தைப்படுத்தப்படலாம் என தெரிகிறது.
எல்லாம் சரிதான் ஆனால் முந்தைய “ஆகாஷ்” டேப்லெட்டுக்கான பதிப்பு பலரை சென்றடையவில்லை என்பது வருத்தமே!
கருத்துரையிடுக