ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் “ஹேக்கர்ஸ் கப்” என்றவொரு மிகப்பெரிய போட்டியை 2011 முதல் நடத்திவருகிறது. இதில் உலகின் எந்தப்பகுதியில் இருந்தும் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். வெற்றி பெறுபவர்களுக்கு மிகப்பெரிய பரிசும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
ஃபேஸ்புக் அலுவலகங்கள்
இந்த ஹேக்கர்ஸ் கோப்பையை வெல்வதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது ஃபேஸ்புக் இணையதளத்தின் ஏதாவது ஒரு பகுதியை ஹேக் செய்யவேண்டும். அல்லது குறிப்பிட்ட தகவலை திருடவேண்டும்.
ஃபேஸ்புக்கின் தகவலை திருடினால் உடனே வேலை என்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வெற்றிபெறுவதில் தானிருக்கிறது உங்களின் சாமர்த்தியம்.
இந்த போட்டிக்கான விவரங்கள் மற்றும் அட்டவணை கீழே:
அட்டவணை :
- முன்பதிவு தொடங்கும் நாள்: ஜனவரி 7 முதல் 27 வரை,
- ஆன்லைன் தகுதிச்சுற்று: ஜனவரி 25 முதல் 27 வரை,
- ஆன்லைன் நீக்குதல் சுற்று 1 : பிப்ரவரி 2
- ஆன்லைன் நீக்குதல் சுற்று 2 : பிப்ரவரி 9
- ஆன்லைன் நீக்குதல் சுற்று 3 : பிப்ரவரி 16
- கடைசி சுற்று: மார்ச் 22 – 23.
போட்டிக்கான பதிவுகள் அடுத்தவாரம் முதல் தொடங்கும்.
source:tamil.gizbot.com
கருத்துரையிடுக