இப்பொழுது தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாகியுள்ளது. உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் இருந்தால் மிக எளிதாக தட்டச்சு செய்ய கூகுள் பல அப்ளிகேசன்களை இலவசமாகவே வழங்குகிறது.
தமிழ் மொழியில் தட்டச்சு செய்யும் வகையிலான கிபோர்ட்கள் சில பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தகவல்களை அடுத்தடுத்து காண்க.
தமிழ் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழ் கிபோர்ட்:
இந்த அப்ளிகேசன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே செயல்படக்கூடியது என்பதை நினைவில் கொள்க. இதன் மூலமாக குறுஞ்செய்திகளை தமிழிலேயே அனுப்பலாம் என்பது தனிச்சிறப்பு.
தமிழ் பார் எனிசாப்ட்கிபோர்ட்:
இதில் தமிழ் கிபோர்ட்கான வடிவமைப்பு உள்ளது. இதை பயன்படுத்தினால் தமிழ் எழுத்துக்கள் எதையும் உங்கள் போனில் பதியத்தேவை இல்லை.
ஃபேஸ்புக் தமிழ் போஸ்டிங்:
இந்த அப்ளிகேசன் மூலமாக உங்கள் தமிழ் செய்திகளை ஃபேஸ்புக் சுவரில் நேரடியாக பதியலாம். தமிழில் தட்டச்சு செய்வதும் மிகவும் எளிதே!
மேலும் இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் இடம்பெற்றுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு.
இதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
இதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழ் யுனிகோட் கிபோர்ட்:
நீங்கள் தங்லிஸ்ஸில் டைப் செய்தாலே போதும் இந்த அப்ளிகேசன் தானாகவே தமிழுக்கு மாற்றிக்கொள்ளும்.
கருத்துரையிடுக