பிரபல சர்வே நிறுவனம், உலகின் பாலியல், கொலை, போன்ற கொடும் குற்றங்கள் அதிகரிப்பதற்கான ஆய்வை மேற்கொண்டது…. இதில் பின்வரும் 7 செயல்கள் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது…
1. மது மற்றும் போதை பொருட்கள்
போதையில் உள்ளவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது.. பெரும்பாலான நாடுகளில் (இந்தியா உட்பட) அரசாங்கமே, மது பான பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து, குற்றங்கள் அதிகரிக்க முதல் காரணமாக இருக்கிறது… தண்டிக்கப்பட வேண்டியதும் அரசாங்கமே!!
2. குழந்தை பருவத்தில் ஏற்படும் மன ரீதியான பாதிப்பு:
குழந்தை வளர்ப்பில் மிகுந்த கவனம் தேவை…. பிஞ்சு மனதை பாதிக்கும் எந்த காட்சியையும் குழந்தைகளுக்கு சொல்லவோ, காட்டவோ கூடாது… கணவன் மனைவி சண்டை கூட குழந்தைகள் முன் கூடாது….
3. செக்ஸ் உணர்வை தூண்டுதல்::
ஆபாச உடை, ஆபாச பேச்சுக்கள், கட்டுப்பாடற்ற வாழ்க்கை, செக்ஸ் ஆசையை தூண்டும் சினிமாக்கள், டிவி நிகழ்சிகள், ஆபாச வீடியோ க்கள், இன்டர்நெட், முறையற்ற உறவுகள், கெட்ட சகவாசம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
4. மனக்குழப்பம்::
கோபத்தை கட்டுப்படுத்துதல், அமைதி, எந்த செயல் நடந்தாலும் நன்மையாகவே கருதுவது, கோபமான சூழலில் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது, விட்டுக்கொடுத்தல், சமுதாய சேவை போன்றவற்றின் மூலம் குழப்பத்தை தவிர்த்து அமைதி பெற முடியும்.
5. தனிமை::
குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெற்றோருடன் அல்லாமல் தனிமையான சூழலில் வாழ்வது அவர்களின் மன நலத்தை பாதிக்கும்…. இன்றைய நவீன உலகின் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு அன்பு, பாசம் கிடைப்பதில்லை….
6. சினிமா::
சினிமா குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது…. சண்டை காட்சிகள், பாலியல் காட்சிகள், கொலை போன்றவற்றை பார்க்கும்போது இதெல்லாம் கற்பனை என்பதை மீறி தானும் ஹீரோ என்ற எண்ணம் தோன்றி ரவுடித்தனம், காதல், காமம், போன்ற குற்றங்களுக்கு ஆளாக்குகிறது.
7. சுய இன்பம்:
சுய இன்பம் உடல் நலத்திற்கு கேடு செய்வதோடு குற்றங்கள் அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது.
கருத்துரையிடுக