அடுத்து தங்களது நிறுவனம் வெளியிட உள்ள ஸ்மார்ட்போனில் 64 பிட் பிராசசரை பயன்படுத்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 64 பிட் பிராசசருடன் கூடிய ஐபோன் 5S யை
வெளியிட்ட சில நாட்களுக்குள் சாம்சங் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஷின் ஜாங் க்யுன் (Shin Jong Kyun) கொரியா டைம்ஸ் இதழிற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக 64 பிட் பிராசசர் கொண்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட அவசரம் காட்ட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். 64 பிட் பிராசசருக்கு மாறுவதற்கு முன்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தரம் உயர்த்துதல் அவசியம் என்றும் கூறப்படுகிறது.
கருத்துரையிடுக