உலகளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது பெரிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Ultra High Definition தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது 77 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது. இத்தொலைக்காட்சியின் விலையானது இதுவரை வெளியிடப்படாத நிலையில், முன்னர் அறிமுகப்பத்திய வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட 55 அங்கு அளவுடைய தொலைக்காட்சியின் விலையை 15,000 டொலர்கள் என LG நிறுவனம் நிர்ணயித்திருந்தது.
இந்நிலையில் இப்புதிய தொலைக்காட்சியின் விலையானது 15,000 டாலர்களை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்புதிய தொலைக்காட்சியின் விலையானது 15,000 டாலர்களை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துரையிடுக