ஹீலியம் பலூன்களின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சாதனை புரிய உள்ளார் ஜோனாத்தன்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஜோனாத்தன் டிராப்பே(வயது 39), ஐ.டி நிறுவனத்தில் வேலை புரிகிறார்.
இவருக்கு எதாவது சாகசம் செய்ய வேண்டும் என்ற ஆசை, எனவே பலூனின் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்து செல்ல முடிவெடுத்தார்.
இதற்காக நேற்றிரவு மெரினேவில் உள்ள கரிபோவ் மைதானத்தில் இருந்து 370 பலூன்களை கட்டினார்.
இதில் ஹீலியம் வாயுவை நிரப்பி, கடலை கடக்க தயாரானார். உயிருக்கு ஆபத்தான இந்த சாகசத்தை நடத்தி காட்ட துணிந்து தயாரானார்.
தனக்கு சாதகமான வானிலை வேண்டும் என்பதற்காக ஜோனாத்தன், 100 நாட்களுக்கு மேலாகவே காத்திருந்தார்.
இவருக்காக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள், வானிலை குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
திட்டமிட்டபடி நேற்று பலூன் பயணத்தை தொடங்கி விட்டார். 2500 மைல்கள் தூரம் அட்லான்டிக் கடல் மேலாக பறந்து 3 முதல் 5 நாட்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்துக்கும் மொராக்கோவுக்கும் இடையே தரையிறங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2010ம் ஆண்டு மே மாதம் ஆங்கில கால்வாயையும், 2011 செப்டம்பரில் ஆல்ப்ஸ் மலையையும் ஹீலியம் பலூன் மூலமாக ஜோனாத்தன் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஆனால் இந்த வழித்தடத்தில் இதுபோன்ற ஹீலியம் பலூன் பயணத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக