A+ A-

ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம்....


ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம்....
வருங்காலப் போக்குவரத்தின் நவீன மாதிரி

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும். 



ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும். 

அங்கு ரயில்களில் ஏறினால் செல்ல வேண்டிய இடத்துக்கு விமானங்களே வந்து ரயில்பெட்டிகளைத் தூக்கிச் சென்று இறக்கிவிடும். ரயில் பெட்டிகள் தூக்கப்படும்போதும், இறக்கிவிடப்படும்போதும் மட்டும் பயணிகள் தங்களது இருக்கைகளில் அமர வேண்டும். மற்ற நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். தற்போதுள்ள ரயில்பெட்டிகளைப் போல் இல்லாமல், சக்கரங்கள் இல்லாத பெட்டிகளாக இவை இருக்கும். க்ளிப் ஏர் (CLIP AIR) போன்றே, பிரிட்டனின் க்லாஸ்கோ (Glasgow) பல்கலைக்கழக மாணவர்களும் இதுபோன்ற ரயிலைத் தூக்கிச் செல்லும் விமான மாதிரியை உருவாக்கியுள்ளனர். 


இது க்ளிப் ஏர் (CLIP AIR)-ஐ விட கூடுதல் பெட்டிகளைத் தூக்கிச் செல்லும் வசதியுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறக்கும் ரயில்கள் நடைமுறைக்கு வந்தால், விமான நிலையத்துக்கு காரில் செல்வது, விமான நிலையத்தில் காத்திருப்பது போன்ற பயண நேரங்கள் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேர முடியும். 

source

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர்.