பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் செவ்வாயில் நிலவியதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உயிர் வாழ தேவையான மூலக்கூறு ஒன்று சேர செவ்வாயில் வாய்ப்புகள் சிறப்பாக இருந்தன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்தலியின் ஃப்லோரன்ஸ் (Florence) பகுதியை சேர்ந்த ஆய்வு பேராசிரியர் பென்னர் (Benner), இந்த தகவலை அறிவியல் கருத்தரங்கில் முன்வைத்தார்.
ஆர்.என்.ஏ (RNA), டி.என்.ஏ (DNA) மற்றும் ப்ரோட்டின் (Protein)-கள் அடங்கிய மூலக்கூறு எவ்வாறு ஒன்றிணைந்தது என்பது நீண்ட நாள்களாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துவந்த ஒன்று. 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான ஆதிகால மரபணு பொருட்களை காட்டிலும், செவ்வாயில் உருவானது கடினமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆர்.என்.ஏ (RNA) அமைப்பிற்கான கனிமங்கள் ஆரம்பகால பூமியின் பெருங்கடல்களில் கலந்திருக்கலாம் என்றும், இது பூமியை காட்டிலும், செவ்வாயில் அதிகம் இருக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் பேராசிரியர் பென்னர் (Benner)-ன் ஆய்வில் அவர் தெரிவிக்கிறார். இதனால் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் எரிகற்கள் மூலமாக பூமிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கருத்துரையிடுக