A+ A-

பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க ...

சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.

பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது

01

START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்

02

இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்
H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.

03

பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். 

பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.