அதி துல்லியமாக புகைப்படங்களை எடுக்கக்கூடிய 20.7 மெகபிக்சல்கள் உடைய கமெராவுடன் Sony Xperia Z1 ஸ்மார்ட் கைப்பேசியானது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதில் 2.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM போன்றனவும் காணப்படுகின்றன.
16GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளதுடன் MicroSD கார்ட்டின் உதவியுடன் 64GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெராவும் காணப்படுகின்றது.
கருத்துரையிடுக