விருப்பங்களை அறிந்து சொல்லும் கமெரா(neurocam wearable camera reads your brainwaves and records what interests you)...Neurocam wearable camera reads your brainwaves and records what interests you

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனமாக இன்று பல்வேறு மாற்றங்கள் அசுர வேகத்தில் இடம்பெற்றுவருகின்றன.

அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகிளின் கண்டுபிடிப்புக்கு பின்னர் அவற்றின் பயனானது பரந்துபட்டதாகக் காணப்படுகின்றது.

தற்போது ஸ்மார்ட் கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்டதும் தலையில் அணியக்கூடியதுமான விசேட கமெரா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கமெராவானது மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் அலைகளை துல்லயமாக அறிந்து ஒரு நபரின் விருப்பங்களை பதிவு செய்யும் ஆற்றல் உடையதாகக் காணப்படுகின்றது.

நன்றி:lankasritechnology

கூகுள் நிறுவனம் தனது விளம்பர சேவையில், பயனர்களின் படம் மற்றும் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சமூக வலைதளம் கூகுள் ப்ளஸ். 
இதனை +1 என்று குறிப்பார்கள்...

ஒரு பயனர் இணையதளத்தில் விளம்பரமாக ஒரு பொருள் தோன்றும் போது, அதனை விருப்பமானதாகவோ, பகிர நினைத்தாலோ , +1 பொத்தானை சொடுக்கினால் அது பகிரப்படும்.

அப்படி பகிரும்போது, அந்த பயனரின் பெயர், படம் அந்த பொருளோடு இணைக்கப்பட்டு விடும்.

அந்த குறிப்பிட்ட பொருள், அந்த நபரின் இணைப்பில் உள்ள வேறு நபர்களின் கண்ணில் தென்பட்டால், அப்போது, முதல் நபரின் படம் மற்றும் பெயர் அங்கு தோன்றும்.

இதன் மூலம், 2-வது நபரால் அந்த பொருள் ஈர்க்கப்படும் என்று கூகுள் நம்புகிறது.

இது வணிக யுக்தியாக கருதப்படுகிறது.

இந்த வணிக யுக்தியை கையாளும் விதமாக தனது விதிமுறைகளில், பயனர்களின் தனியுரிமைகளை மாற்றம் செய்து, வரும் நவம்பர் 11-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.


இது, பயனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், பயனர்களின் தனியுரிமையில் பாதிப்பில்லை என்றும், கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர் விரும்பினால் மட்டுமே அவரின் தனிப்பட்ட விபரங்கள் பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த வணிக யுக்தியை , ஃபேஸ்புக் சமூக வலைதளம் ஏற்கனவே, பயன்படுத்தி வருகிறது.

நன்றி:புதியதலைமுறை


தமிழில் இணையத்தில் எழுத....

http://tamil.yahoo.com/type-in-tamil/ அனைத்து வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களும் வணிக நோக்கத்தினாலாவது தமிழை ஆதரிக்கின்றன. ஆனால் தமிழன் மட்டும் தமிழில் இணையத்தில் எழுத முடியாத / விரும்பாத நிலையில் இருக்கிறான்.
இதை மற்ற வேண்டியது நம் கடமை...

http://transliteration.yahoo.com/tamil/
http://tamil.yahoo.com/

Google

தமிழில் இணையத்தில் எழுத....



Google Input Tools for Windows




அனைவர்க்கும் பகிருங்கள்...இணையத்தில்   நாம் தமிழால் இணைவோம்...

plans-are-on-to-build-space-elevators-using-carbon-nano-tube-technology-to-travel-to-space

"பல ஆயிரம் மடங்கு செலவு குறையும்" ஏணியில் ஏறி வானத்துக்குப் போக முடியுமா? இந்தக் கேள்வி இப்போது வியப்பாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் நீண்ட காலத்துக்கு இந்தக் கேள்வி வியப்பை ஏற்படுத்தப் போவதில்லை. காரணம், உண்மையிலேயே வானத்துக்கு ஏணி அமைப்பது சாத்தியம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தர்க்க ரீதியில் நிரூபித்திருக்கிறார்கள்.இப்போதைய அறிவியல் உலகில், விண்ணுக்கு ஒரு செயற்கைக் கோளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அதைத் தாங்கிச் செல்வதற்கு ஒரு வாகனம் அவசியம். அதுதான் ராக்கெட். மனிதர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கும் இந்த ராக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு ஆகும் செலவுதான் பல நாடுகளுக்குப் பிரச்னையாக இருக்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முன்வைக்கப்பட்ட யோசனைதான், ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR). அதாவது விண்தூக்கி. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky)-யின் மூளையில் உதித்த யோசனை இது. பாரிஸ் நகரத்து ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்ட கான்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky), இதே கோபுரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் வானத்துக்கு ஏணி அமைத்துவிட முடியும் என்று நம்பினார். அவர் முயற்சி செய்த உயரம் 35 ஆயிரத்து 786 கிலோமீட்டர். அதாவது பூமியின் தரைப் பகுதியில் இருந்து புவிநிலைச் சுற்றுப்பாதை அமைந்திருக்கும் உயரம். இந்த உயரத்தில் செயற்கைக் கோள்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அவரது திட்டம்.
இந்தத் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று வந்திருக்கிறது. ஆனாலும், விண்தூக்கியை அமைப்பதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட காலமாகச் சிக்கல் இருந்து வந்தது. 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கோபுர வடிவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் சோர்ந்திருந்த நேரத்தில்தான், கார்பன் நேனோ ட்யூப் என்று கூறப்படும் அதிசயப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உதவியுடன் எவ்வளவு நீளத்துக்கும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.
தற்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இண்டர்நேஷனல் ஸ்பேஸ் எலவேட்டர் கன்சார்ட்டியம் (International Space Elevator Consortium) என்ற சர்வதேச விண்தூக்கி அமைப்பு செயல்பட்டு வருகிறது. கார்பன் நானோ ட்யூப் மூலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR) அமைக்க முடியும் என்று இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதனால், நிலவுக்கும், செவ்வாய்க்கும் கூட லிஃப்ட் அமைப்பது சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. குறைந்த செலவில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு, செலவில்லாத செல்போன் சேவை போன்றவையும் ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR)-ன் பயன்கள். விண்வெளிக்கு சாமான்யர்கள் செல்வதும் சாத்தியமாகும்.

தற்போதைய நிலையில் விண்ணுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் 8 சதவீதம் தோல்வியடைகின்றன. ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR) அமைக்கப்பட்டால், இந்தத் தோல்வியே இருக்காது.


நன்றி:புதியதளைமுறை





A.I smart watch
A.I smart watch
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கைப்பேசிகளை உருவாக்குவது போன்று தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியும் சூடு பிடித்துள்ளது.

இதன் அடிப்படையில் அப்பிள், சம்சுங், சோனி என்பவற்றினை தொடர்ந்து தற்போது அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய A.I ஸ்மார்ட் கடிகாரங்கள் அறிமுகமாகவுள்ளன.

1.2GHz Processor, உட்பட 3G வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலையானது 279 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:lankasritech

செவ்வாய் கிரகத்தில் பழமையான சூப்பர் வால்கேனோ (Super Vocano) எனப்படும் பெரிய எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Super Vocano
Super Vocano
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செயலில் இருந்த எரிமலைகள் அங்கு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும், தற்போது அறியப்பட்டுள்ள சூப்பர் வால்கேனோ (Super Vocano) -க்கள் இதற்கு முன்னதாக செயலில் இருந்ததற்கான அடையாளங்கள் தெரியவில்லை.

செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் இவை அமைந்திருக்கின்றன. அந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து இந்த தகவலை லண்டனின் இயற்கை, வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் நாசா (NASA) ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டறிந்துள்ளனர்.

பிற எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பிழம்பு மற்றும் சாம்பல் உள்ளிட்டவைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முன்னொரு காலத்தில் செயலில் இருந்த எரிமலைகளினால் கிரகத்தின் வெப்பநிலை மாற்றம் பெற்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


Supervolcanoes

Supervolcanoes

Supervolcanoes

Supervolcanoes


நன்றி:புதிய தளைமுறை


நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.

ms word



இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க


Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .


பயனுள்ளதாக  இருக்குமென நினைக்கிறேன்

கொடைக்கானல்

Kodaikanal map
Kodaikanal  map

கொடைக்கானல் (ஆங்கிலம்: Kodaikanal ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.

22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.
காலநிலை

கோடை காலங்களில் அதிக பட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 11.3 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.

சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன்.பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான் 

கி.பி.1821 ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845ல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். 

போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,969 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 16,805 ஆண்கள், 16,164 பெண்கள் ஆவார்கள். கொடைக்கானல் மக்களின் சராசரி கல்வியறிவு 87.3% ஆகும். இது தேசிய கல்வியறிவு சராசரியைவிட மிகவும் அதிகமானது.

விழாக்கள் 

வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.
கொடைக்கானல் செல்ல

செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை

எப்படி செல்வது?
  • கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில்
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில். 

சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில், திண்டுக்கல் மற்றும் மதுரைக்குஇடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். 

திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் பழனிஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம். 

இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது.தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்

அருகில் உள்ள வானூர்தி(Airport) நிலையங்கள்

மதுரை 135 கிலோமீட்டர்
கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
திருச்சி 195 கிலோமீட்டர்
சென்னை 465 கிலோமீட்டர்

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

  • குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  • பிரையண்ட் பார்க்
  • தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
  • தூண் பாறைகள்
  • கவர்னர் தூண்
  • கோக்கர்ஸ் வாக்
  • அப்பர் லெக்
  • குணா குகைகள்
  • தொப்பித் தூக்கிப் பாறைகள்
  • மதி கெட்டான் சோலை
  • செண்பகனூர் அருங்காட்சியம்
  • 500 வருட மரம்
  • டால்பின் னொஸ் பாறை
  • பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
  • பியர் சோலா நீர்வீழ்ச்சி
  • அமைதி பள்ளத்தாக்கு
  • குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  • செட்டியார் பூங்கா
  • படகுத் துறை
  • வெள்ளி நீர்வீழ்ச்சி
  • கால்ஃப் மைதானம்
கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். 

தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
கொடைக்கானலில் கிராமம் அதிகமாக இருகின்ரன.

இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்

வெள்ளி நீர்வீழ்ச்சி

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

Silver Falls
Silver Falls
கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.

இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

Kodaikanal Lake
Kodaikanal Lake

ப்ரயண்ட் பூங்கா

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.

150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

Bryant Park
Bryant Park
கோக்கர்ஸ் நடைபாதை:


Coaker's walk
Coaker's walk
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.

வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).

டால்பின் மூக்கு

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது.

இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.

Dolphin's nose
Dolphin's nose
பசுமை பள்ளத்தாக்கு(suicide point)

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
Suicide point
Suicide point
தலையர் நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.
Thalaiyar falls
Thalaiyar falls
குணா குகைகள்

கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர். அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம். 

Guna caves
Guna caves
Pine forest

இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

Pine forest
Pine forest
பியர் சோழா அருவி(Bear shola Falls)

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
Bear shola falls
Bear shola falls
Kodaikanal solar observatory

கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.

Solar observatory
Solar observatory
திறந்திருக்கும் நேரம்

காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்

இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

Pillar rocks
Pillar rocks
பாம்பர் அருவி

 இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.

Pambar falls
Pambar falls
குறிஞ்சி ஆண்டவர் கோவில்

1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில்.
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.
Kurinji Andavar Temple
Kurinji Andavar Temple
செண்பகனூர் அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.

Shenbaganur Museum
Shenbaganur Museum
நிறைகளும் குறைகளும் இருந்தால் பதிவுசெய்யுங்கள்..

நன்றி:tn-tourguide

 Children's and Elders' Day
 Children's and Elders' Day

முதியோர்கள் குழந்தைக்கு சமமானவர்கள். வயது ஏற ஏற உடலளிவிலும் மனதளவிலும் அவர்கள் செயல்பாடுகள் மாறிவிடும். அவர்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பது நமது கடமை.

நாமும் பிற்காலத்தில் முதியோர் ஆவோம், என்று நினைத்து பார்த்தாலே அவர்கள் மேல் அக்கறை செலுத்த தயாராகிவிடுவோம்.

இனி வருங்காலங்களிலாவது ’முதியோர் இல்லம்’ இல்லாத உலகை படைப்போம்.

முதியோர்களை மதிப்போம்.
சிறுவர்களுக்கு அன்பு காட்டுவோம்.

யூடியுப்பில் விளம்பரங்களை தடை செய்ய

யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது.

அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்.

youtube add Block

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.