செவ்வாய் கிரகத்தில் பழமையான சூப்பர் வால்கேனோ (Super Vocano) எனப்படும் பெரிய எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Super Vocano |
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செயலில் இருந்த எரிமலைகள் அங்கு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும், தற்போது அறியப்பட்டுள்ள சூப்பர் வால்கேனோ (Super Vocano) -க்கள் இதற்கு முன்னதாக செயலில் இருந்ததற்கான அடையாளங்கள் தெரியவில்லை.
செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் இவை அமைந்திருக்கின்றன. அந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து இந்த தகவலை லண்டனின் இயற்கை, வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் நாசா (NASA) ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டறிந்துள்ளனர்.
பிற எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பிழம்பு மற்றும் சாம்பல் உள்ளிட்டவைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முன்னொரு காலத்தில் செயலில் இருந்த எரிமலைகளினால் கிரகத்தின் வெப்பநிலை மாற்றம் பெற்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நன்றி:புதிய தளைமுறை
கருத்துரையிடுக